உண்மையைத் தேடுங்கள், பாகம் 3
ஆக்கத்தையும், அழிவையும் தருவது இறைவன்.
இரண்டில் எது சிறந்தது என்பதை பகுத்தறிவதே
மனிதனின் சிந்தனை..
இறைவன் மனம் வழியாக யாவருடனும் பேசுகிறார்.
கட்டளை இடுகிறார்..
" சில நேரங்களில் இதைச் செய்ய வேண்டுமெனத் தோன்றியது. அதனால் செய்தேன். ", என்போம்.
" ஆபத்து நேரங்களில், " இவ்வாறு செய். ", என மனம் சொல்லியது.
அது சரியெனப்பட்டதால்,
செய்தேன்.
ஆபத்திலிருந்து தப்பித்துவிட்டேன்.. ", என்று பலர் கூறக் கேட்டிருக்கிறேன்...
சில பிரச்சனைகளுக்கும் மனமே காரணமாக இருக்கலாம். ஆனால்,
அது போன்ற பிரச்சனைகளுக்குத் தீர்வுகளைத் தருவது
மனமும், பகுத்தறிவும் சேர்ந்து தான்...
உண்மையைச் சொல்கிறேன்..
பகுத்தறியாத மனிதர்களே துன்பங்களுக்குள் வாழ்கிறார்கள்..
சில தங்கள் பகுத்தறிவை தீய வழிகளில் உபயோகிக்கிறார்கள்...
நான் எனது பகுத்தறிவைக் கொண்டு இறைவனிடும் ஆணையைப் புரிந்து,
என்பணியைச் செய்கிறேன்...
நான் எழுதும் ஒவ்வொரு எழுத்தும் என்னால் எழுதப்படவில்லை...
என் மனதில் உதித்தவை..
அவற்றைப் பகுத்தறிந்தே சொல்கிறேன்.
இதன் நோக்கம் தாங்கள் அனைவரும் பகுத்தறிவைப் பயன்படுத்த வேண்டும்
என்பதே...
முற்றும்...
மிக்க நன்றி...