நான் கருப்பாக இருக்கக் காரணம் தெரியுமா பல விகற்ப பஃறொடை வெண்பா கருவாக அன்னை வயிற்றி லிருக்க

நான் கருப்பாக இருக்கக் காரணம் தெரியுமா ?

பல விகற்ப பஃறொடை வெண்பா ..

கருவாக அன்னை வயிற்றி லிருக்க
உருவில் மெருகேறி அங்கமெல்லாம் மின்னிடவே
கண்டபலர் கண்படவே என்னன்னை மீதுபட்ட
கண்ணெல்லாம் என்மீது வேண்டுமென வேண்டிடவே
ஆண்டவனை ஈன்றெடுத் திட்டாளே அன்னை
கரிக்கட்டை யாக யெனை

30-12-2016

எழுதியவர் : (30-Dec-16, 2:05 pm)
சேர்த்தது : Venkatachalam Dharmarajan
பார்வை : 91

மேலே