காதல் - ஒரு ஆய்வு

உண்மையில் காதல் ஒரு அற்புதமான உணர்வு..
மகத்துவம் வாய்ந்தது...
பிறகு ஏன் சமுதாயத்தில் காதல் என்றாலே ஒரு தவறான பார்வையோடு நோக்குகிறார்கள்?? என்ற கேள்வி எழுகிறது...
அதற்குக் காரணம் காதலர்களே ஆவர்...

இன்றைய நடைமுறையில் பல காதலர்களுக்கு காதலுக்கும், காமத்திற்கும் இடையேயான வித்தியாசம் தெரியவில்லை என்பதே உண்மை...

பல காதலர்களுடைய கைப்பேசி உரையாடல்கள் மற்றும் அரட்டைகள் குறிப்பாக படுக்கையறை தொடர்பாகவே இருக்கிறது என்று ஒரு ஆய்வு அறிக்கை சொல்கிறது...

உண்மையில் காதல் என்றால் என்னவென்று
இன்றைய இளைஞர்கள் மற்றும் இளைஞிகள் பலரிடம் கேட்ட போது அவர்கள் பல விதமான கருத்துகளை, கவிதைகளை முன்வைத்தார்கள்...
அவற்றிலிருந்து காதலைப் பற்றி அவர்கள் கொண்டிருந்த எண்ணங்கள் வெளிப்பட்டன...
இன்னும் சிலரோ காதல் என்ற வார்த்தையை கூறியதுமே கோபப்பட்டார்கள்...
அவர்களின் கோபத்திற்கு காரணம் அவர்கள் வாழ்க்கையில் ஏற்பட்ட காதல் அனுபவம் தான் என்று
அவர்கள் கோபத்தில் வெளிப்படுத்திய வார்த்தைகள் உணர்த்தின...
இன்னும் சிலரோ,
தங்களுடைய காதலைப் பற்றி பெருமையாகக் கூறிக் கொண்டார்கள்...
இப்படி பலருடைய கருத்துகளைக் கேட்ட பின்பு, காதலைப் பற்றி பல தெளிவான விடயங்களைப் புரிந்துக் கொள்ள முடிந்தது...

இன்றைய காலத்தில் காதல் செய்கிறோமென்று கூறிக் கொள்ளும் காதலர்களுக்கு இடையே மிகச் சரியான புரிதல்கள் இல்லை...

" சரி காதலித்த கல்யாணம் செய்த தம்பதியர்களிடமாவது இந்த புரிதல் உணர்வு இருக்கிறதா??,
அவர்களிடத்தில் இன்னும் அந்தக்காதல் இருக்கிறதா?? ", என்று அறிய முற்பட்டு,
எனக்கு தெரிந்த காதல் திருமணம் செய்த தம்பதியர்களிடம் , கணவன், மனைவி இருவரிடமும் தனித்தனியாக பல கேள்விகள் கேட்டேன்..
அவ்வாறு நடத்திய சோதனையில்,
கேட்கப்பட்ட கேள்விகளுக்கு சில கணவன், மனைவிகளின் பதில்கள் ஒன்றாகவே இருந்தன...
இன்னும் சில கணவன், மனைவிகளின் பதில்கள் சற்று முரண்பட்டதாகவே இருந்தன...
இன்னும் சில கணவன், மனைவிகளின் பதில்கள் முற்றிலும் மாறுபட்டிருந்தன...
இதிலிருந்து ஒரு உண்மையைத் தெளிவடைந்தேன்...
பொதுவாக கணவன்மார்கள் பணம் சம்பாதிப்பதிலேயே முழுமையாக ஈடுபட்டு விடுகிறார்கள்.
வேலையில் ஏதாவது கோபமென்றால் அதை வீட்டில் வந்து காட்டுகிறார்கள்...
குறிப்பாக வீட்டில் உள்ளவர்களோடு மகிழ்ச்சியாக இன்முகத்துடன் பேசுவதில்லை...

சரி கணவன்மார்கள் தான் இப்படி இருக்கிறார்கள் என்றால், மனைவிமார்கள் அதற்கு மேலாகவே இருக்கிறார்கள்...
கணவனிடம் காதல் மொழி பேசியதைவிட பட்டுப்புடவைகள் மற்றும் தங்கம் போன்ற ஆடம்பரத் தேவைகள் குறித்தே பேசுகிறார்கள்...
அவற்றையே சுகமென்று கருதுகிறார்கள்...
சில மனைவிமார்கள் தங்கள் கணவன்மார்களிடம் அடிக்கடி இப்படி சலித்துக் கொள்வார்களாம், " உன்ன கட்டிக்கிட்டு நான் என்ன சுகத்தக் கண்டேன்?? ", என்று...

இப்படிப்பட்டவர்களிடம் காதல் என்பது எப்படி இருக்கும்???...

" இந்த உலகில் இனம், சாதி, மதம், மொழி, பணம், அந்தஸ்து போன்ற அனைத்தையும் தாண்டி உயர்ந்து நிற்பது காதலொன்று தான். ", என்ற வீரவசனம் திரைக்கதைகளில் தானே இரசிக்கப்படுகிறது...
நடைமுறையைப் பார்த்தால் முற்றிலும் மாறுபட்டதாகவே உள்ளது...

அழகான காதலி அருகில் இருக்கையிலேயே காதலனின் கண்கள்,
தன் முன் நடமாடும் பெண்களின் அழகை இரசிக்கிறதென்றால்
அதெப்படி உண்மைக் காதலாக இருக்க இயலும்???...

தான் காதலித்த காதலி மாற்றானிற்கு மனைவியாகிவிட்டாலெனத் தெரிந்ததும் மறுமொழி கூறாமல்,
அவளிடம் எவ்விளக்கத்தையும் கேளாமல் அவளைவிட்டு விலகிவிட்டால்,
அது தான் உண்மைக்காதல்...

மாற்றானின் மனைவியான பின்பு அவளிடம் நெருங்க எண்ணினால்,
நெருங்கினால் அதுவே கள்ளக்காதலாகி விடுகிறது...
இவ்வாறு கள்ளக்காதலில் வயப்பட்டு பெற்ற பிள்ளைகளையும், கட்டிய கணவனையோ அல்லது மனைவியையோ தவிக்கவிட்டு ஓடியவர்கள் பலருண்டு...

காதலுக்கு விரோதிகளாக இருப்பவர்கள் பெற்றோர்கள் மட்டுமல்ல.. காதலர்களும் தான்...

இன்றைய நடைமுறை வாழ்வில் காதலர்களிடம் அவசரமே காணப்படுகிறது...

மேலே இளைஞர்கள் மற்றும் இளைஞிகள் காதலைப் பற்றி பல கருத்துக் கூறினார்களென்று கூறி இருந்தேன் அல்லவா!...

அதில் பெரும்பாலான பதில்கள், " காதலென்றால் காதலர்கள் இறுக்கி அணைத்துக் கொண்டு இருசக்கர வாகனத்தில் உலா வருதல்,
முத்தப் பரிமாற்றங்கள்,
அரட்டை அடித்தல்,
கைபேசியில் கடலை போடுதல். ", போன்றவையே...
இன்னும் சிலருடைய கருத்துகளை சொல்ல எனது நாக்கு கூசுது சகோதர, சகோதரிகளே...

இப்படிப்பட்ட கருத்துக் கொண்டுள்ளவர்களிடம் எப்படி உண்மைக் காதலை எதிர்பார்க்க முடியும்??..
அப்படியென்றால் உண்மைக்காதலே இல்லையா???...

உண்மைக்காதல்களும் இருக்கின்றன..
அவை விளம்பரத்தை விரும்புவதில்லை...
கல்லூரி, கடற்கரை, பூங்கா, திரையரங்குகள் போன்ற பொது இடங்களில் அநாகரிகமாக நடந்துகொள்வதில்லை...
அவையே பக்குவப்பட்ட காதல்கள்...

வயதால், உடலால் பக்குவமடைந்து, ஹார்மோன்களின் தூண்டுதலால் ஏற்படும் உணர்வு காமம் எனப்படும்...

மனதால் பக்குவமடைந்து இரண்டு மணங்களும் ஒன்றாக ஒன்றிப் போன உணர்வே பக்குவப்பட்ட காதல் எனப்படும்...

காதல் முழுக்க முழுக்க மனதின் உணர்வுகளை மையமாகக் கொண்டது...
இதைப் புரிந்து காதலிக்கும் காதலர்களின் உடல்களுக்கிடையே இடைவெளி இருக்கும்..
ஆனால், அவர்களுடைய மனங்களுக்கிடையான இடைவெளி முற்றிலும் இல்லாது போய்விடும்...
இந்நிலையை அடைந்த காதல்களுக்கு ஆயுள் மிக அதிகம்..

காதல் உடலுணர்வுகள் தொடர்பானதாக இருக்குமானால்,
அந்த உடலுணர்வுகள் தீர்ந்ததும் காதலானது மறைந்துவிடும்...
இதிலிருந்து தாங்கள் தெரிந்துக் கொண்டிருப்பீர்கள்,
சில காதல் பிரிவதற்கும்,
சில காதல் மரணம் தாண்டியும் வாழ்வதற்கான காரணங்களை...

காதல் குறித்து இன்னும் விவரமாக எழுதலாம்...
மனதின் கற்பனைக்கு எப்படி ஒரு எல்லை இல்லையோ, அது போன்றே காதலும் முடிவற்றது...
இன்னும் தொடர்ந்து காதலில் ஏற்படும் பிரச்சனைகள் மற்றும் அப்பிரச்சனைக்கான மனதளவிலான தீர்வுகள் பற்றி எழுத எண்ணியுள்ளேன்...
இக்கட்டுரையைப் பற்றிய தங்கள் கருத்துகளைக் கூறுங்கள் சகோதர,சகோதரிகளே....

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (2-Jan-17, 10:43 am)
பார்வை : 565

மேலே