நானிங்கு நீயிங்கு - இன்னிசை வெண்பாக்கள்

நானிங்கு நீயெங்கு நாடிவரும் காதலெங்கு
வானிங்கு சொல்லிடுமே வந்தனங்கள் நாள்தோறும்
தேனிங்கு தேனமுதத் தேகத்தால் நெஞ்சத்தால்
மானிங்கு தோற்குமடி மன் .

ஆட்சியினால் கண்டலர்ந்தே அன்றிலேன நான்கண்டக்
காட்சியினால் கற்கண்டாய் கண்ணேநீ நின்றாயே
சாட்சியினால் நீயென்னைச் சான்றாகக் காட்டிநின்றாய் .
நீட்சியினால் நெஞ்சத்தில் நீ .


நீயழகின் தேனிசையே நீண்டகால நேரிழையே
தீயழகில் தீர்க்கின்றாய்த் தீயாகக் காதலிலே
ஆயிரந்தான் காட்சியினா லாயிரங்கள் செய்கின்றாய்த்
தாயாகி தாலாட்டி தான் .


தானேதான் கார்காலத் தண்ணழிலே காதலிலே
நானேதான் நீதானே நர்த்தனங்கள் நாட்டினிலே
கார்காலக் கண்ணேநான் காண்கின்றேன் சீரெழிலை
நேர்கால நேசத்தால் நேர் .

ஆக்கம் :- பைந்தமிழ்ப் பாமணி . சரஸ்வதி பாஸ்கரன்
திருச்சிராப்பள்ளி , தமிழ்நாடு , இந்தியா

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (4-Jan-17, 3:17 pm)
சேர்த்தது : sarabass
பார்வை : 77

மேலே