மொழியிழந்து மௌனத்தில் துளிர்க்கிறது காதல் - இன்னிசை வெண்பாக்கள்
காதல் கவிதை
****************
கவி காதல் மகாராணி சிறப்பு
சான்றிதழ் போட்டியாளர்
*******************************
மொழியிழந்து மௌனத்தில்
துளிர்க்கிறது காதல்.
காதல் மொழியே கன்னியவள் மௌனமன்றோ !
மோதல் விடுத்தே மோகத்தால் காதலிப்போம் .
ஓதல் இதுவே ஒழுக்கமாய் வாழ்தலே
சாதலும் போக்கிடும் சான்று .
துளிர்க்கின்ற காதல் துவளா நிலைக்குச்
சளிப்பின்றி மௌனத்தின் சாட்சியாய் வந்தே
களிப்புடன் நின்றிடும் காசினி இன்பம்
தெளிவுடன் கிட்டும் தெரிந்து .
கண்டேன் கனியமுதே கன்னல் சுவைதரும்
பெண்ணே எழிலுடைய பேசாத சித்திரமே
மண்ணே மதிமுகமே மாசற்றக் காதலால்
விண்ணே வியனே வியந்து .