படம் உதவி பாவலர் புதுவைத் தமிழ்நெஞ்சன் படத்திற்கு ஹைக்கூ கவிஞர் இரா இரவி

படம் உதவி பாவலர் புதுவைத் தமிழ்நெஞ்சன் !

படத்திற்கு ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !


பூமி மகள் தவிக்கிறாள்
வாய் பிளந்து
இரக்கமின்றி மனிதர்கள் !

வான்மழை பொய்த்தது
வறண்டது
வளமான பூமி !

ஒற்றுமை விரிசலால்
விழுந்தன
நிலத்தில் விரிசல்கள் !

பூமியின் தவித்த வாயுக்கு
தண்ணீர் தர மனமில்லை
இரும்பு மனம் !

வானமே
அமுதமழை பொழிந்திடு
செழிக்கட்டும் பூமி !

எழுதியவர் : கவிஞர் இரா .இரவி (5-Jan-17, 6:32 pm)
பார்வை : 99

மேலே