ஒருவார்த்தை சொல்லடி இதழ்வழியே 555

உயிரே...
உன்னால் நான் தினம் தினம்
தவிப்பது உனக்கு தெரியாதா...
உன்னை காணாத நாட்களில்
நான் துடிப்பது நீ அறிவாயா...
தெரிந்தும் தெரியாதவளுமாய்
என்னை கொள்வது ஏனடி...
உன் இதழ்களில் இருக்கும் ஈரம்
உன் இதயத்தில் இல்லையா...
காதல் பார்வை மட்டும்
எனக்கு கொடுக்கிறாய்...
காதல் மொழி பேசவில்லையடி
என்னிடம் நீ இன்றுவரை...
மௌனத்தால் என்னை
காயப்படுத்தும் காதலியே...
ஒருவார்த்தை சொல்லடி
உன் இதழ்வழியே...
நீ பார்க்காமல் சென்றாலும்
பார்த்திருக்கிறேன்...
உன்னை மட்டும் நான்
எனக்கானவளே.....