திரும்பிப் பார்க்கிறேன்

திரும்பிப் பார்க்கிறேன்
கடந்து வந்தப் பாதையை
நடந்து முடிந்த நிகழ்வுகளை
கண்டு களித்தக் காட்சிகளை
துயரில் ஆழ்த்தியத் துன்பங்களை
கண்ணீர் வடித்திட்ட நேரங்களை ...
மனிதம் வாழ்ந்த காலத்தில்
மனிதனை மனிதன் மதித்தது ...
பெரியோரை வணங்கி என்றும்
அவர்தம் அறிவுரையை ஏற்றது ...
கூட்டுக் குடும்பமாய் வாழ்ந்து
இன்பத் துன்பங்களை பகிர்ந்தது ..
உறவை மதித்து உரையாடியது
நட்புகளுடன் சுற்றித் திரிந்தது ..
இனமொழி உணர்வுடன் இருந்தது
வஞ்சமிலா இதயமுடன் வாழ்ந்தது ...
சேவைகள் புரிந்திட தேவைகளை துறந்த
அரசியலில் நல்லவர்கள் வாழ்ந்தது ...
அடுக்கிக் கூறிடலாம் நான் கண்டதை
அடியேன் திரும்பிப் பார்த்த வாழ்வை !
மாற்றங்கள் தவறில்லை இயற்கையே
மாறியதால் அடைகிறோம் ஏமாற்றமே !
மாறித்தான் போனது மண்ணில் வாழ்வும்
மரித்திடும் நாளை எதிர்நோக்கி நாமும் !
பழனி குமார்