படத்தைப் பார்த்து ஹைக்கூ சொல்லு

இறக்கும் குறைமாத பயிர்சிசு
பனிக்குடம் உடைந்த பூமித்தாய்
கவலையில் உழவன்…!

நாவறண்ட பூமி
வாய் பிளக்கிறது
வானத்தைப் பார்த்து…!

இல்லையென்கிறது பூமி
மடியைப் பிளந்து காட்டி
நீர் கேட்கும் உழவனிடம்..!

விரிந்து பிளந்து
குழி பறிக்கிறது பூமி
சாகும் உழவனுக்கு…!

சுரண்டி சுரண்டி
உடைந்த பூமிச்சட்டியின்
சிதறல்கள்…!

கணக்கில் சேமிக்காமல்
காசு கேட்டால்
எப்படி…?

எழுதியவர் : கோபிநாதன் பச்சையப்பன் (10-Jan-17, 8:03 am)
பார்வை : 441

மேலே