ராமு-சோமு உரையாடல்-சிரிக்க,சிந்திக்க

சோமு : ராமு அண்ணே, இப்பெல்லாம் குறுக்கு வழில
சீக்கிரம் புகழ் அடைய ஏதேதோ செய்கிறாங்க அண்ணே
இதப்பத்தி நீங்க என்ன நினைக்கிறீங்க அண்ணே ?

ராமு : இப்பெல்லாம் கோவிலுக்கு போகும் மனிதர்கள்
கடவுளை சாஷ்டாங்கமாய் சேவிப்பதில்லை
ஆனால் கியூ ல மணி கணக்கா நின்னின்ட்டு
அரசியலில் செல்வாக்கு மிக்க ஒருவருக்கு
தரையில் விழுந்து சேவித்து கும்பிடு போடுகிறார்கள்
இந்த கும்பிடு இதய பூர்வமாய் வருவதல்ல
தனக்கு கிடைத்த இடத்தை கக்கி வைத்துக்கொள்ளவும்
மற்றும் அரசியலில் புகழ் இனி ஏறி கொடிகட்டி பறக்கவும்


சோமு அன்னே இதை தான் கூழை கும்பிடுனு சொல்லுவார்களோ ?

ராமு " ஆமாம் ஆமாம் ராமு ; இன்னும் பாரு இப்பெல்லாம்
அரசியல் தலைவர்,தலைவிங்களுக்கு தோத்திர பாடலைகள் கூட
ஸீடீ ஆகா கிடைக்குது, கட்சி மீட்டிங்கில் கூட லௌட் ஸ்பீக்கர் ல

சோமு : வெட்கக்கேடு அண்ணே உலகம் போற போக்கு ஒண்ணுமே சரியில்ல
அண்ணே

ராமு : டேய் சோமு நேர்மை தலை குனியுது

சோமு { புரியுது அண்ணே ஹா ஹா ஹா

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (10-Jan-17, 2:32 pm)
பார்வை : 249

சிறந்த நகைச்சுவைகள்

மேலே