என் இதயம் குளிருதடி உன்னால் 555

உயிரே...
மார்கழி மாதத்து பனியில்
குளிர் மண்ணெல்லாம் குளிருமடி...
எனக்கு மட்டும்
வெப்பமாக நீ இல்லாமல்...
உனக்காக நான்
காத்திருந்தபோது...
உன்வீட்டு வாசலில்
மஞ்சள்நீர் தெளித்தபோது...
என் இதயம்
உன்னால் குளிர்ந்ததடி...
பனியில் நான்
காத்திருக்கிறேன் உனக்காக...
வேகமாக வாசலில்
மாக்கோலமிட்டாய்...
நான் பனியில்
நிற்ககூடாதென்றா...
என்னை ஏங்கவைப்பதற்காகவே
சொல்லடி கண்ணே...
மார்கழி மாத பூசணிப்பூவோடு
காத்திருக்கிறேன் நான்...
சம்மதம் சொன்னால்...
நாளைய தைமாத பூக்கள் உன்
தோளில் மணமாலையாக.....