தென்றல் வீசும்

தினந்தோறும் நீயுன் திருவாயால் திட்டிச்
சினங்கொள்ளல் விட்டுச் சிரித்து – மனம்விட்டுப்
பேசுந்தன் பெண்டாட்டிப் பிள்ளைக ளோடாங்கு
வீசுமே தென்றல் விரைந்து.
*மெய்யன் நடராஜ்

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (இலங்கை) (12-Jan-17, 1:47 am)
பார்வை : 167

மேலே