தை மங்கை

தை மங்கை

இனிமையான கரும்பு போல
தித்திக்கும் தேனை போல
திகட்டும் சர்க்கரை பொங்கலுடன்
வேகமும் விவேகமும்
தூய்மையும் உழைப்பும்
நமக்கு கிடைத்திடவும்
பொங்கட்டும் புதுபொங்கல் !

உழவு செய்து
விதை விதைத்து
வியர்வை சிந்தி
தன் நோய் பாராமல்
பயிர் நோய்க்கு மருந்திட்டு
தனி மனிதன்
ஒவ்வொருக்கும் உணவளித்து
உள்ளம் மகிழ செய்யும்
உழவரை போற்றுவோம் !

பனியில்லா
"தை" யில்
பணமில்லா
பரிவர்தனையுடன்
பனைஓலையின்றி
பாசமெனும் பாலையிட்டு
பாயச பொங்கலிட்டு
வரவேற்போம் .

"தை" மங்கையை !

என்றும் அன்புடன்
உ.சேது


  • எழுதியவர் : உ.சேதுராமலிங்கம்
  • நாள் : 12-Jan-17, 12:58 pm
  • சேர்த்தது : sethuramalingam u
  • பார்வை : 46
  • Tanglish : thai mangai
Close (X)

0 (0)
  

மேலே