இது பிரளயமல்ல, புதிய உலகத்தின் தொடக்கம்

மனிதர்களிடம் இருந்த ஒற்றுமை முழுமையாக அழிந்து இருந்தது..
மனிதர்கள் இனம், மொழி, மதம், சாதி, நிறம் என்ற பெயர்களால் தன்னுடையதே சிறந்தது என்று அடித்துக் கொண்டு உலகை ஆள முயற்சித்துக் கொண்டிருந்தார்கள்...
எவற்றால் நாம் உயிர் வாழ்கிறோமென்பதை மறத்து எங்கு தீவிரவாதம் வளரந்து கொண்டிருந்த நேரத்தில்,
அந்த அதிசயம் நிகழ்ந்தது...

அவ்வளவு நாட்களாக வாய் மூடி அமைதியாய் கடமையாற்றி வந்த இயற்கை பேசும் திறனை பெற்றது...
அதுமட்டுமில்லாமல், அன்றுவரை நடவாதிருந்த யாவும் எழுந்து நடக்க ஆரம்பித்தன...
ஆம்.. வெறிபிடித்த மனிதர்களை அடக்க வெறி கொண்டெழுந்தது இயற்கை...

பறவையினங்கள், விலங்கினங்கள் என யாவும் மனிதர்களை நோக்கி, " பழிக்குப்பழி ", என்று முழக்கமிட்டுக் கொண்டே வேட்டையாடத் தொடங்கின...

கடலன்னை தனது அலைகளின் உத்வேகத்தை அதிகமாக்கி தனது எல்லையை அதிகமாக்கிக் கொண்டே வந்தாள்...

பர்வதங்கள் அசைந்து முழக்கிட்டன, " தகுதியில்லாத மனித பதர்களே! யாரை ஆள எண்ணம் கொண்டீர்கள்?. ", என்று...

பொறுமை மிகு பூமாதேவியும் தன் பங்கிற்கு நிலத்தை அதிர வைத்து,
தனது புவிஈர்ப்பு விசையை அறவே நீக்கிட்டாள்...
மனிதர்களெல்லாம் கீழே விழுந்து, எழ முடியாமல் கதறினார்கள்...

காற்று தனது கோபத்தை வெளிப்படுத்தியது,
தன்னிடமுள்ள ஆக்ஸிஜனையெல்லாம் அறவே நீக்கி,
தன்னைத் தானே விஷமாக்கிக் கொண்டு...

எரிமலைகளும் வெடிக்க,
நிலமும் வெடிக்க,
பூமியே நெருப்பு பந்து போல், இன்னொரு சூரியனாகவே மாறிவிட்டது...

வானிலிருந்து சூரியனும், நட்சத்திரங்களும் தங்களுடைய பங்கிற்கு நெருப்பு மழையை பொழிந்தன...

இவ்வாறு சர்வ நாசம் நிகழும் வேளையிலேயே நல்லோருக்கு இயற்கையே அடைக்கலம் தந்து பாதுகாத்தது...

கெட்டவர்களின் அழிவைக் கண்டு நல்லோர்களின் மனதில் நன்மையின் மீது நம்பிக்கை ஏற்பட்டது...

நாடுகளெல்லாம் அழிந்தன...
நிலப்பரப்புகள் குறுகிக் கொண்டே வந்தது...

உலகில் 98% என்ற அளவிற்கு நீரானது நிரம்பிவிட்டது...
மீதி 2% மட்டுமே நிலப்பரப்பு இருந்தது...
அதில் நல்லோர்களெல்லாம் பாதுகாப்பாக இருந்தார்கள்...

கெட்டவர்களனைவரும் வேரறுக்கப்பட்டதும் இயற்கையானது மீதியுள்ள நல்லோரை நோக்கி கூறியது, " தானென்ற அகந்தையோடு உலகை ஆள நினைத்தவர்களையெல்லாம் அழித்தாகிவிட்டது...
உங்களின் நல்லெண்ணங்களாலும், நல்ல செயல்களாலும் உங்களை நாங்கள் பாதுகாத்தோம்...
உங்களுடைய அத்தியாவசியத் தேவைகள் அனைத்தும் தரப்படும்...
நல்லதொரு மனித சமுதாயமாக அன்போடு, மற்ற உயிர்களோடு கருணையோடு வாழுங்கள்...
உங்களது சமுதாயம் நல்ல முறையில் விரிவடையும் போதெல்லாம் கடலன்னை தனது ஆதிக்கத்திற்குட்பட்ட நிலப்பகுதிகளை விடுவிப்பாள்..
வாழ்க வளமுடன்.. ", என்று கூறியது...

அக்குரல் ஒலித்து மறைந்த அடுத்த நொடியில் அந்த 2% நிலத்தில் மனிதர்கள் மற்றும் மற்ற உயிரினங்கள் வாழ ஏதுவான சூழ்நிலைகள் உருவாகின...

மனிதர்களுக்கான வீடுகளை இயற்கையாக நிலமகள் பிரசவித்தாள்...
அதனுள் சகல வசதிகளும் இருந்தன...
அதைக் கண்ட அந்த நல்லோர்கள் இயற்கையை வணங்கி போற்றி ஒற்றுமையாக வாழத் தொடங்கினார்கள்....

பிறரை அழிக்க நினைத்தவர்களெல்லாம் அழிந்து போனார்கள்...

இவ்வாறாக இனிதே நல்லதொரு மனித சமுதாயம் அமைக்கப்பட்டது....

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (13-Jan-17, 8:22 pm)
பார்வை : 296

மேலே