நாம் ஒற்றுமையோடு உலகைப் பாதுகாப்போம் - பாகம் 1

#விழிப்புணர்வு_நாடகம்...

காட்சி:- 1
இடம்:- வேற்றுக்கிரகம்..

ஒரு தளபதி ஏலியனும்,
தலைவர் ஏலியனும் பேசிக் கொண்டிருந்தன...

தலைவர் ஏலியன்:- தளபதியே! நம் உலகம் எப்படி இருக்கிறது? மக்களனைவரும் நலமாக இருக்கிறார்களா??

தளபதி ஏலியன்:- தலைவா! நாட்டில் மக்கள் எல்லாரும் நலம்.
ஆனால் மக்கள் தொகை பெருக்கத்தால் இடப்பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
அதனால், நாம் விரைவாக பூமியை நோக்கி படையெடுத்து சென்று மனிதர்களை அழித்து, பூமியை நம்வசமாக்கி நாம் மக்களைக் குடியேற்ற வேண்டும்..

தலைவர் ஏலியன்:- அதற்கு அவசியமில்லை படைத்தளபதியே!

தளபதி ஏலியன்:- ஏன் அப்படி சொல்கிறீர்கள் தலைவா?

தலைவர் ஏலியன்:- ( அமைதியாக ) மனிதர்களைப் பார்த்தாயா?
தங்களுக்குள் ஒற்றுமை இன்றி, சாதி, மதம், இனம், மொழி, நிறமென சண்டையிட்டுக் கொண்டிருக்கிறார்கள்..

தளபதி ஏலியன்:- ஆம் தலைவா.. அதனால், நாம் படையெடுத்துச் சென்றால் எளிதில் வென்று விடலாம்..

தலைவர் ஏலியன்:- வேண்டாம் படைத்தளபதியே! மனிதர்கள் வெறித்தனங்களுக்குள் சிக்கி, தீவிரவாதத்தை மேற்கொள்வதால் வெகுவிரைவில் அழிந்துவிடுவார்கள்...
நாம் இப்போது படையெடுத்து சென்று மனிதர்களை அழிப்பது என்பது சாகப் போகிற கிழவனைக் கழுத்தை நெறித்துக் கொல்வதற்குச் சமம்..
ஆகவே வேடிக்கைப் பார்க்கலாம்...

தளபதி ஏலியன்:- நீங்கள் சொல்வதும் சரிதான் தலைவா...
நாம் காத்திருக்கலாம்...

காட்சி:- 2
இடம்:- பூமி

மனிதர்கள் கூட்டம் கூட்டமாக நின்று தங்கள் இனத்திற்கு, தங்கள் சாதிக்கு, தங்கள் மதத்திற்கு, தங்கள் மொழிக்கு முன்னுரிமை வேண்டுமென முழக்கமிடுகிறார்கள்...

ஆங்கிலேயர்கள்:- எங்கள் மொழியே உலகின் ஆட்சி மொழியாக இருக்கும்..
எந்த நாட்டினரும், எந்த மொழியினரும் எங்கள் மொழியை கற்றால் தான் மதிக்கப்படுவார்கள்...

இந்திக்காரர்கள்:- இந்தியாவில் எங்கள் மொழியே ஆட்சி மொழி..
இந்தியர்கள் அனைவரும் கட்டாயம் இந்தி கற்க வேண்டும்...

தமிழர்கள்:- நாங்களே உலகில் முன் தோன்றிய மூத்த குடிமக்கள்..
எங்கள் மொழியே அனைத்து மொழிகளுக்கும் தாய் மொழி... தமிழர்களுக்கு உலகில் தனி இடம் தர வேண்டும்..
தமிழர்கள் தான் உலகை ஆட்சி செய்வான்...

தெலுங்குக்காரர்கள்:- எங்களுக்கு தனி தெலுங்கானா வேண்டும்..
அதற்காக எதையும் செய்வோம்...
பிற மொழியினருக்கு எங்கள் நாட்டில் குடியிருக்க அனுமதி இல்லை...

மலையாளிகள்:- எங்கள் நாட்டுக்காரர்களுக்கே திறமை இருக்கிறது. அதற்கு முன், மற்றவர்களெல்லாம் தூசி தான்...

சிங்களர்கள்:- எங்கள் நாட்டில் நாங்கள் மட்டுமே வாழ்வோம்.
மற்றவர்களுக்கு வாழும் உரிமையில்லை...

பாக்கிஸ்தானிகள்:- காஷ்மீரை பாக்கிஷ்தானுடன் இணைக்காமல் விட மாட்டோம்...
இந்தியாவை கைப்பற்றாமல் விட மாட்டோம்...

(இவ்வாறு ஒருபக்கம் மொழி மதமென போராட, இன்னொரு பக்கம் சாதியும், சாதிக்கு எதிரான போராட்டங்களும் நிகழ்கின்றன.)

பிராமணர்கள்:- நாங்களே உயர்ந்த சாதி..
பிரமணர்களென்ற பிரம்மா என்ற ஒரு பொருளுண்டு..
சமஸ்கிருதத்தையே ஆட்சி மொழியாக்குவோம்...
நாங்கள் சொல்லுவதே தர்மம், நீதி, நியாயம்...
எதிலும் எங்களுக்கே முதலிடம்...

தாழ்த்தப்பட்டோர்:- நாங்களும் பிரமணர்களுக்கு குறைந்தவர்கள் அல்ல...
அரசாங்கப் பதவிகளெல்லாம் எங்களுக்கே சொந்தம்...
நாங்கள் வசதியாக இருந்தாலும், அரசாங்கச் சலுகைகளில் எங்களுக்கே முன்னுரிமை..
வேலைவாய்ப்பு, மருத்துவமென்றால் எங்களுக்கே முன்னுரிமை...

பிற்படுத்தப்பட்டோர்:- எங்களுக்கும் முன்னுரிமை வேண்டும்..
அதற்காக ஒரு அமைப்பை ஏற்படுத்தி நாங்களும் போராடுவோம்...
எங்கும் எதிலும் எங்கள் சாதிப் பெயரைக் குறிப்பிடுவோம்...

(இவ்வாறு பல சாதிகள் தங்கள் உரிமைக்காகப் போராட, இந்த சாதிக்களுக்கு எதிராக குரல் கொடுத்து போராடிய தந்தை பெரியாரின் பரப்புரையாளர்கள்,
மிகவும் அநாகரீகமாக வாய்க்கு வந்தபடி, விமர்சித்துகொண்டிருக்கிறார்கள்.)

பெரியார் பரப்புரையாளர்கள்:- கடவுள் இல்லை. நாங்கள் பிரமணர்களின் வைப்பாட்டி மகன்கள் அல்ல.. (இதற்கு மேலும் அவர்களுடைய வாதத்தை எழுத கை மறுக்கிறது. சொல்ல நாக்கு தடுமாறுகிறது.)

இப்படி அவரவர் சுயநலத்திற்காகப் போராடிக் கொண்டிருக்க, அரசியல்வாதிகள், அரசாங்க அதிகாரிகள் தந்திரமாக மக்களை ஏமாற்றி ஊழல் செய்து கொண்டிருக்கிறார்கள்...

தமிழ்நாட்டு அரசியல்வாதிகளின் முழுக்கங்களைப் பாருங்களேன்...

பாஜக:- தமிழ்நாட்டில் திராவிடக் கட்சிகளை இல்லாது ஒழிப்போம்...

திமுக:- லட்சியத் திமுகவை அழிக்க எவராலும் முடியாது...

சசிகலா அதிமுக:- அடுத்த அம்மாவாக நான்... மக்களுக்காக நான்... மக்களால் நான்...
எனது தோழியின் கட்சி எனக்கே சொந்தம்...

தீபா அதிமுக:- எனது அத்தையின் கட்சி எனக்கே சொந்தோம்..

இப்படி தமிழக அரசியல் நாற்றமடிக்கிறதென்றால் உலக அரசியலைப் பற்றி சொல்லவா வேண்டும்???...

அமெரிக்கா:- நான் தான் ஐநா சபையின் தலைமை நாடு. உலகில் ஐநா சபைக்குட்பட்ட எந்த நாட்டும் எங்க கட்டுப்பாட்டின் கீழ் தான் இயங்க வேண்டும்...

இவ்வாறு அமெரிக்கா தான் கட்டுப்பாட்டில் மற்ற நாடுகளை அடக்கி வைத்திருப்பதாலேயே வல்லரசாக விளங்குகிறது...

உலகில் பல தீவிரவாத அமைப்புகள் உருவாக அமெரிக்காதான் காரணம் என்பதை உணர்ந்த நாடுகள் அமெரிக்காவோடு நட்புறவு கொள்ளாமல் ஐநா சபையோடு இணங்காமல் பிரிந்து உள்ளன...

குறிப்பாக இரஷ்யா, அமெரிக்காவிற்கு எதிரான தனது பலத்தை அதிகப்படுத்தி வருகிறது...
எந்த நேரத்திலும் உலகப் போர் ஏற்படக்கூடும்...

(தொடரும்...)

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (13-Jan-17, 11:56 pm)
பார்வை : 491

மேலே