திருவிழாக்காலம்

இது விழாக்காலம், நம் நாட்டு பாரம்பரிய திருவிழாக்காலம்!
பொங்கி வரும் பொங்கலைக் கண்டு மகிழ்ச்சி பொங்கும் திருவிழாக்காலம்!
சீறி வரும் காளையை கண்டு பாய்ந்து வரும் சிங்கமாய் மாறும் இளைஞர்களின் திருவிழாக்காலம்!
உனக்கும் எனக்கும் உதிரத்தை அளித்த பாலை வழங்கும் உன்னதமான பசுவின் திருவிழாக்காலம்!
ஓரமாய் ஒதுங்கி இருக்கும் ஊர் பெரியவர்களை உற்சாகப் படுதும் உறியடிக்கும் திருவிழாக்காலம்!
ஒற்றுமையின் உணர்வை ஊற்றெடுக்க வைக்கும் காணும் பொங்கலின் கிராமத்து திருவிழாக்காலம்!
நம் முன்னோர்கள் கொண்டாடிய திருவிழாக்காலம்! நாம் கொண்டாடும் திருவிழாக்காலம்!
நமது சந்ததியினர் கொண்டாடும் திருவிழாக்காலம்!
தமிழர் திருநாள் எனும் திருவிழாக்காலம்!

அனைவருக்கும் எனது பொங்கல் மற்றும் தமிழர் திருநாள் வாழ்த்துக்கள்!

எழுதியவர் : மோ ரா (15-Jan-17, 1:30 pm)
சேர்த்தது : மோகன் ராஜா
பார்வை : 1808

மேலே