ஊடலும் கூடலும் காதலில் சுகமே

அன்பே.....

காண்தகவாய் காண்பாரைக் கவர்ந்தால்
கூட்டத்தின் மையமாய் ஆசியத்தில் திளைத்தால்
கொண்டவனாய் அச்சாரம் பதிக்க
கோபப்பட்டு கனலாய் கொந்தளிக்கிறாய்...
கோபமும் உரிமையின் வெளிப்பாடே

காதல் கொண்ட நெஞ்சிற்கு கடிவாளம் ஏது.......
கள்உள்ளம் உவகையில் கரைபுரண்டது
கனிஉதடுகள் வரைகளை உடைக்கிறது
கள்ளத்தனமாய் கருவிழிகள் பிதுங்கி
காயப்படாமல் உனை வதைக்கிறது

ஊடலும் பின் கூடலும்
தேடலும் பின் திரைதலும்
நாடலும் பின் நடித்தலும்
வேண்டலும் பின் வெறுத்தலும்
தூண்டலும் பின் தவிர்த்தலும்
காதலில் சுவையான சுகமே....

கவிதாயினி அமுதா பொற்கொடி

எழுதியவர் : வை.அமுதா (15-Jan-17, 3:35 pm)
பார்வை : 173

மேலே