சிந்திக்க வைப்பதே ஹைக்கூ 02

காலம் காலமாய் ஏமாற்றுகிறார்கள்
தாயின் கையை தட்டி விட்டது குழந்தை
நிலா சோறு

&
கவிப்புயல் இனியவன்
சிந்திக்க வைப்பதே ஹைக்கூ

-----

வயல் நிலங்கள் வெடித்தது
வறட்சியால் பயிர்கள் இறப்பு
வெட்டிய மரங்களின் சாபம்

&
கவிப்புயல் இனியவன்
சிந்திக்க வைப்பதே ஹைக்கூ

--------

நிலத்தில் கோடுகள்
வறுமை கோடானது
நீடிய வறட்சி

&
கவிப்புயல் இனியவன்
சிந்திக்க வைப்பதே ஹைக்கூ

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (16-Jan-17, 8:25 pm)
பார்வை : 120

மேலே