முறைக்கும் பெண்
குளத்தினிலே மலர்ந்த மலர்களாய விழிகளிலே
பட்டாம்பூ ச்சிகளாய் படபடக்கும் இமைகளே
உந்தன் கருவிழிகள் எனைநோக்க வேண்டி
பிறவிப் பயன்பெறுவேன் உன்விழிப் பார்வையிலே
கார்மேகத்து லிருந்து வெளிப்படும் ஆதவனாய்
முழுமதி முகத்தோல் எனைநோக்க அய்யகோ
கடும் நெருப்பும் சுட்டதில்லை இதுவரையில்
விழிகளிலே சுடும் நெருப்பை கண்டேனே
இவ்வயகமும் பொசுங்கிவிடும் உன்விழி சுடரினிலே
மன்னித்துவிடு தவறேதும் இழைத்திருந்தால்