நாங்க மாறிட்டோம் நீங்க

*நாங்க மாறிட்டோம்... நீங்க....*
*********************************
நா சின்ன வயசில இருக்கும் போது...
வயித்த வலின்னு அழுதா...
மூணு ரூபாய கொடுத்து பெட்டிக்கடையில
கருப்புக்கலர் வங்கிக்குடி,
சரியாகிடும்னு சொல்லும் எங்க பாட்டி...
ஆனா இன்னைக்கு நாம
குடிக்கிற பானத்துலதான்
வயித்த வலியே வரும்போலிருக்கு...
அதுக்காக நாங்க
ஒரு குறிபிட்ட நிறுவனத்துக்கு எதிரா
வயித்தெரிச்சல்ல பேசுறோம்னு நினைக்காதிங்க...
***********
இன்று நாம் விரும்பி குடிக்கும்
பானம்
அதே கருப்பு கலர்ல இருக்கும்
கோக் மற்றும் பெப்சி...
அத நாம உண்மையில்
விரும்பித்தான் குடிக்கிரோமா...?
என்றால் உண்மையில் இல்லை...
அத குடிச்சா கவுரவம்...
அத குடிச்சா ஸ்டைல்...
எப்படி தமிழ் நாட்டில்
ஆங்கிலம் பேசுனா மரியாதையோ..
அதேபோல் அங்கிலேயர் கண்டுபிடிப்பான
கோக், பெப்சிய குடிச்சாலும் மரியாதை...
நம்ம மக்களுக்கு ஒரு பழக்கம் இருக்கு..
கடையில பிடிச்ச பொருள் கிடைக்கலைனா...
கிடைச்ச பொருள வாங்குவது...
அதுதான் அவர்களின் மூலதானம்
தரகு முதலாளிகளின் உதவியுடன்
இந்தியாவிற்குள் நுழைந்து...
கடைக்காரர்களிடம் குளிர்சாதன பெட்டியை
மலிவுவிலையிலே அல்லது இலவசமாக கொடுத்து...
இதைமட்டும் தான் விற்கவேண்டும் என்று சொல்வது...
இதற்கு அன்றையை காலத்தில்
வானொலியில் விளம்பரம் வேறு...
இதற்கிடையே தினத்தந்தியில்
உள்ளூர் பதிப்பில் விளம்பரம்...
கடாத்துணியில் பேனர் என்று இருந்த
நம்மவூர் நிறுவனத்தால்
எப்படி போட்டி போடா முடியும்...
பாவம்
காளிமார்க்கும்...
வின்சென்டும்....
ஆயிரம்பேருக்கு வேலை தாரோம்
என்று சொல்லி...
நம்மூரிலே கம்பனி ஆரம்பித்து
இன்று லட்சக்கணக்கான பேருக்கு
குடிக்க தண்ணீர் இல்லாமல் ஆக்கிவிட்டார்கள்...
தாமிரபரணியில்....
மக்களும் மினரல் வாட்டர்
குடிக்க ஆரம்பித்துவிட்டார்கள்.
கின்லேவும், அக்வுவாபினாவும்...
நம்ம தண்ணீரை எடுத்து... நமக்கே விற்கும் யுத்தி...
இதை மாற்றி அமைப்போம்...
*இறுதியாக*
****************
நாங்க மாறிட்டோம்
நீங்க...
இவண்
✒க.முரளி (spark MRL K)
&
ஸ்ரீ குமார்
செல்வா ஆர்.டி.ஓ