ஏறு தழுவுதல்

ஏறு ! பெரும் பேறு
செய்ததால்
தழுவுதல் நடந்தது !
அமிழெனும் பால்பொழிந்த
பசுவினம் வளர்ந்தது
தமிழினம் தகவினம்
கலைகளை வளர்த்தெடுத்தது !

காளைகள் நமது நாளைகள்
அதன் கடன் நம்
தேவைகள் சேவைகள்
நம் கடன் நாளும்
அதன் நிலைபேணுதல் ..

வாடி வாசல் !
அதை நாடிபோதல் ..
காளைகள் தெருவெங்கும்
ஓடி மோதல்..
ஊர்கூடி காணல் -அப்டோது
முறைப்பெண்ணின்
முகத்தில் நாணம் காணல் ..
ஆடிப்பாடல்- தேனருவி
பாயும் தமிழ்த்தாயின் காதில் !
இது தமிழினத்தின்
கலாச்சார காதல் !

ஏறு தழுவுதல் !
தொன்றுதொட்டு வந்தது
கன்றுபெற்று தந்தது
பசுவினம் வளர்த்தது
எம் இனம் தழைத்தது
இதில் கேடு ஏதுள !

பீட்டா ..!
நீ யாரடா ? எருது
எம்குலம் தானடா ..
வீரவிளையாட்டு பாரடா..
உன்சாவு எம்கையில் தானடா
மதி இருந்தால் ஓடிவிடு
எங்களை விளையாடவிடு !

எழுதியவர் : வசிகரன்.க (22-Jan-17, 2:20 pm)
பார்வை : 220

மேலே