காளை

என் வீட்டுக் காளைகள் எல்லாம் மெரினாவில்......
சல்லிக்கட்டு் கேட்டு
அங்குள்ள காளைகளெல்லாம் ஆறு நாட்களாய் களத்தில்.......
பெண்ணுக்கு காவலாய்
மண்ணுக்கு தூதாய்
கண்ணுக்கு அழகாய்
பண்பாட்டுக்கு பண்ணாய்
கலாச்சாரத்தின் கண்களாய்
கட்டுப்பாட்டு கண்ணியவான்கள்
தண்ணென்றே தோற்றமளிக்கின்றனர்
காளைக்காய் காளைகளின் போராட்டம்......வேண்டும் நிரந்த சல்லிக்கட்டு....... என் காளைகளுக்காய்

எழுதியவர் : மீனாட்சி (22-Jan-17, 4:20 pm)
பார்வை : 69

மேலே