மாண்புமிகு மாணவன்

மாணவன் நினைத்தால்
மா மலையும் சிறு துளியே
மண்டியிட மாட்டோம்
மனு கொடுக்க மாட்டோம்
அகிம்சையே எங்கள் வேதம்
அன்னை மொழியே எங்கள் தாகம்
அன்பால் ஆட்சி செய்வோம்
ஆதரவோடு அகிலம் வெல்வோம்
சூளுரைக்க தயங்க மாட்டோம்
சூளுரைத்தால் முடிக்காமல் விடவும் மாட்டோம்
ஒன்று கூடியே உலகை வெல்வோம்
சமத்துவத்தின் பெயரை வெல்வோம்
வல்லரசை நெருங்கி விட்டோம்
வண்ணம் சேர்க்காமல் உறங்கமாட்டோம்
மாணவன் நினைத்தால் வான‌த்தையும்
வளைத்து விடுவோம்...

எழுதியவர் : வே.புனிதா வேளாங்கண்ணி (22-Jan-17, 5:58 pm)
Tanglish : maanbumigu maanavan
பார்வை : 206

மேலே