ஜல்லி கட்டு பாடல்

பீட்டா வேணாம், நோட்டா வேணாம், பாரின்ல கோட்டாவும் வேணாம்
பெப்சி வேணாம், ஜெர்சி வேணாம், அவனோட வியாபாரம் வேணாம்
வேணும் ஜல்லி கட்டு இல்ல போறோம் மண்ண விட்டு
வேணும் ஜல்லி கட்டு மாட்ட அவுத்து உட்டு

பீட்டா வேணாம், நோட்டா வேணாம், பாரின்ல கோட்டாவும் வேணாம்
பெப்சி வேணாம், ஜெர்சி வேணாம், அவனோட வியாபாரம் வேணாம்
காள முரட்டு காள சேந்தே நாங்க வாரோம்,ஒன்றே சேந்து நிப்போம்
நாட்டை ஆள போறோம், மண்ணே எங்கள் மூச்சி வேணாம் உங்க பேச்சி

டாடா வேணாம் டேட்டா வேணாம், ஏமாத்த யோசிக்க வேணாம்
ஜெர்சி வேணாம், பெப்சி வேணாம் அவனோட வியாபாரம் வேணாம்
நில்லு ஒதுங்கி நில்லு, தள்ளு தடைய தள்ளு
விண்ணே முட்டும் கூட்டம், விட்டு குடுக்க மாட்டோம்

பீட்டா வேணாம், நோட்டா வேணாம், அயல்நாட்டு பாலோ பண்ண வேணாம்
மதிப்போம் சட்டத்த மதிப்போம்,காப்போம் நாட்ட காப்போம்.
கடவுள் கொடுத்த இயற்க்கை வளம் நம்ம கிட்ட கொட்டி கொட்டி இருக்கு
அயல் நாட்டு செயற்கை வளம் நம்மளுக்கு இனிமேலும் எதுக்கு

பீட்டா வேணாம், நோட்டா வேணாம், பாரினோட ஐடியாவே வேணாம் .
பெப்சி வேணாம், ஜெர்சி வேணாம், அவனோட வியாபாரம் வேணாம்
ஒன்று பட்டு நிப்போம்,வென்று விட்டே செல்வோம்
விட்டு கொடுக்க மாட்டோம், இனி சும்மா இருக்க மாட்டோம்

வெற்றி கொடி தொப்புள் கொடி என்றும் எங்கள் தேச கொடி போதும்
எல்லாம் இங்க இருக்கு மத்ததெல்லாம் நமக்கு எதுக்கு
வேணாம் எதுவும் வேணாம் போதும் இருப்பது போதும்
காப்போம் மண்ண காப்போம் என்றும் உயிர கொடுப்போம்

எழுதியவர் : வி ர சதிஷ் குமரன் சிட்லபா (22-Jan-17, 9:13 pm)
சேர்த்தது : Drvr Sathis Kumar
Tanglish : Jalli kattu paadal
பார்வை : 299

மேலே