கிராமியக் கவிதை - கருவாச்சியின் காதல்

களத்துமேடு போற மச்சான்
காத்திருங்க நானும் வாரேன்.
பழைய சோறும் வெங்காயமும்
பாசத்தோட எடுத்து வாரேன்.


வயக்காடு காத்திருக்கு
வாங்க மச்சான் போவலாம் .
வரப்போற வெள்ளாம
வந்திடுமே சீக்கிரமா ....!!


தலைநிறைய பூவைச்சு
தலைகுனிஞ்சு நானும் வாரேன்.
விலகியுமே போவாத மச்சான்
வீரன் நீங்க கிட்ட வாங்க !!!!


மனசு முழுக்க உங்க நெனப்பு
மறக்கவுமே முடியல ....!
மதுரை சந்தை போவோம் மச்சான்
மல்லிகைப்பூ வாங்கித் தாங்க !!!


அந்தி மாலை நேரத்தில
ஆத்தோரக் கரையினில
வந்திடுவேன் நானும் மச்சான்
வாசனைப்பூ சூடிக் கிட்டு ....!!!!


ஒத்தையில போவாத மச்சான்
அத்தமவ நானும் வாரேன்.
நிறத்தப் பாத்து நீங்காத மச்சான்
நிசமானக் காதலப் பாரு ...!!!


கருவாச்சி நானும் காதலோட
காத்திருக்க ... கண்ணெல்லாம் கண்ணீரு !
உசுராகத் தேடி வாரேன் மச்சான் !
ஓடிவந்து ஏத்துக்கங்க மச்சான் !!!!


ஆக்கம் :- கவிஞர் . சரஸ்வதி பாஸ்கரன்

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (23-Jan-17, 4:06 pm)
சேர்த்தது : sarabass
பார்வை : 106

மேலே