குருவின் கலவி

குருவியின்
கவிதைகள்
தனிப்பட்ட
விமர்சனம் அல்ல

எனக்காக
எழுதும்
எழுத்துக்கள்

நான்
கை விரல்
பிடித்து காலாற
நடந்த நினைவுகளை
தாலாட்டி பார்ப்பேன்

தாயின் மடி
விழுந்து
நரைத்த முடி
தழுவி
செல்ல
கேலி செய்யும்
மந்திர புன்னகையை
சொல்லி பார்ப்பேன்.......

என்னை வம்புக்கு
இழுக்கும் அத்தை
மகள்களை
ரசித்த கதையை
கற்பனையில்
கொண்டு வருவேன் ....

தங்கை
கன்னத்தை
கிள்ளி
சிவக்கிறதா...என
பார்த்து
கருவாச்சி அவளை
கண்ணடித்ததை
கருவாக்குவேன் ....

காலை எழுந்தவுடன்
ஓடி வரும்
என் வளர்ப்பு மகள் (பூனை)
காணாமல் போனதை
வருத்தத்தில்
பதிவு செய்வேன் ....

இரவு கட்டிலின்
மீது படுத்து கொண்டு
விட்டத்தை பார்த்து
நாளை யாரை
வம்புக்கு இழுக்கலாம்
என் எண்ணியதை
சத்தமின்றி
பகிர்வேன் ....

நட்பும்
காதலும்
ஊடலும்
உறவாடுதலும்
என் எழுத்தில்
ராஜ்யம் செய்யும் ...


யாருக்கும் என்று
குருவி கலவி
நடத்துவதில்லை ..
குருவிக்கு
உணர்வு
வரும்போது
உணர்ச்சி கொள்ளும் ...
என் கவிதையும்
அதுப்போல ....

குத்தூசிகளை
பிரசவித்தால்
குழப்பம் என்பதுஅல்ல
யாரோ குத்த பட்டதை
குருவி சொல்லுகிறது
அதுவும்
உங்களை அல்ல ...


தடை வேண்டாம்
என் எழுத்து
குழந்தை
இப்போதுதான்
நடை பயில்கிறது ....

எழுதியவர் : இன்பா (23-Jan-17, 4:22 pm)
சேர்த்தது : இன்பா மு ஞாசெ
பார்வை : 165

மேலே