தேவதை

என்னவளின்
அழகை வர்ணிக்க
தேடினேன் கம்பனை.....
நாடினேன் கவி பேரரசை.....
என்னவென்று சொல்ல...!
நெற்றியில் மின்னும்
சாந்து பொட்டினையா...!
ராமன் வளைத்த வில்லென
இரு புருவத்தினையா....!
என்னை.....
குத்தி இழுக்கும்
குண்டூசி கண்களையா...!
அஞ்சுகம் கொஞ்சும்
செவ்வாயின் அமுதினையா....!
தாழம்பூ அலங்கரித்த
சிகையின் அழகினையா...!
என்னவளே....
புயலும் தென்றலானதடி -உன்
கொடி இடை அழகில்!
வானவில்லும் வலையுதடி-உன்
வண்ண புடவையில்!
அன்னப்பறவையும் அன்னாந்து பாக்குதடி -உன்
அன்ன நடையில்!
கொல்லுதடி உன் அழகு
காளையர்களை மட்டும் அல்ல
கன்னியர்களையும் தான்.....!

எழுதியவர் : சித்ரா சதிஷ் (23-Jan-17, 4:54 pm)
சேர்த்தது : சித்ரா சதிஷ்
Tanglish : thevathai
பார்வை : 566

மேலே