உன்னையெழுதுகிறேன்,,,,

எழுத நினைக்கிறேன்....
உன்னை வாசித்த படியே
நீ என் அருகில் இல்லாத
வலிகளைச்சொல்லி....

என்னைச்சுற்றிய கோடுகளை
உன் நினைவுகள் நிரப்புகிறது....

உன்னைச்சேரும் நாட்களை எண்ணியே
என் இளமை இறக்கிறது...

யாராலுமே உணர முடியாத
ரணங்களை என் உயிர்
சுமந்து செல்கிறது.....

இது ஒரு கொடூரமான
மௌனப்பயணம்
உன்னை அடையும் நாள் வரைக்கும்....

என் விழிகளில்
விழுந்த நீ,
ஏன் விலகிச்செல்ல மறுத்தாய் ???
ஏன் விதையாய் முளைத்தாய் ???

தினம் உனைத்தாங்க நினைக்கிறது மனசு
அதே கணம் உன் அருகாமையை
இழந்து தவிக்கிறது உசுரு....

என் மரணத்தை வென்றவள் நீ...
என் இளமையை சுண்டி இழுத்தவள் நீ...
என் விதியினிலே விதையாய் வீழ்ந்தவளும் நீ....

காற்றெல்லாம் தேடுகிறேன்
என் காதோரம் உன் -
குரலை காணவில்லை..

காதலியானாய்,
மனைவியானாய்,
என் குழந்தையும் நீயானாய்
உன்னோடு நான் வழாமலே..

தனிமை என் மீது சரிந்து விழுகிறது
நீ சாய்ந்து கொள்வதெப்போது
என் மார்பின் மேலே...?

எழுதியவர் : இர்பான் அஹ்மத் (23-Jan-17, 5:41 pm)
சேர்த்தது : ifanu
பார்வை : 1351

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே