எங்கள் உரிமை எங்கள் உயிர்
புது வரலாறு
படைக்கிறோம்
எங்கள்
தடைகளை
நாங்களே
உடைக்கிறோம்
நாங்கள்
இந்தியன்
என்பதை
மதிக்கிறோம்
அதற்கு முன்
நாங்கள்
அனைவரும்
வீர தமிழன்
என்பதை
உரைக்கிறோம்!
எங்கள்
உரிமை இழப்பதும்
எங்கள்
உயிரை இழப்பதும்
ஒன்று
அதனால் தான்
தமிழ் இனமே
ஒன்றாய்
சேர்ந்து
போராடுது
இன்று !
தமிழன் போராட்டம்
வெல்லும்
தமிழன் பெயரை
உலகமே
சொல்லும்!
வாழ்க தமிழ்
வாழ்க தமிழன்