நானொரு குழந்தை
#நானொரு_குழந்தை...
மழலைகளைக் கண்டாலே மழலையாய் மாறிவிடுகிறேனே...
மழலைகள் தங்கள் மழலை மொழியில் என் பெயர் சொல்ல மயங்கிப்போகிறேனே...
மழலைகளைக் கண்டால், என் செல்லமே, கற்பூரமே,
அருட்பெரும் சோதியின் அம்சமே என்றெல்லாம் கொஞ்சி விளையாடவே ஏங்குகிறேனே...
இருப்பினும், தயக்கம் கொள்கிறேன்...
ஏனெனில், இந்த உலகமே தவறோடு பழகி, தவறாக வாழ்கிறதே...
ஏதாவது முன் பின் தெரியாதவரின் குழந்தையைக் கையில் தூக்குகிறேனென்றால்,
என்னை குழந்தைத் திருடனென்று கூறவும் இவ்வுலகம் தயங்காதே...
ஒருவேளை நான் கையில் தூக்கியது பெண் குழந்தையாக இருப்பின்,
என்னை காமூகனென்று கூறவும் தயங்காத கயமை கலந்த உலகமாயிற்றே என்று எனது பகுத்தறிவு என்னை எச்சரிக்கிறதே...
தெரிந்தவர் குழந்தையாக இருந்தாலும், நண்பரின் குழந்தையாக இருந்தாலும், உறவினரின் குழந்தையாக இருந்தாலும்,
கையில் தூக்கி கொஞ்சி மகிழ வேண்டுமென்றே தொன்றினாலும் இன்றைய சுயநல உலக மனிதர்களின் மனமும், குணமும் அறிந்ததாலே, அறிவதாலே, குழந்தைகளைக் கண்டால் சிறு புன்னகை வீசிவிட்டு செல்கிறேனே....
என்னைக் கண்டால் எந்த குழந்தையும் சிரிக்கும்....
ஏனெனில், குழந்தைகளைக் கண்டால் நானுமொரு குழந்தையாகிறேன்,
தூய அன்பால்...