தேவதை

வானிலிருந்து விண்மீன் ஒன்று,
பூமியில் விழுந்த நாள் இன்று..

பூவிழி விரியும் முகம் கண்டு,
அமுதைப் பொழியும் பொன் வண்டு..

கண்மணி தூங்கிட இதமாக,
வானவில் வந்து தாலாட்டும்..

பொன்மணி பசிக்கு பதமாக,
மேகங்கள் வந்து பாலூட்டும்..

அறிவில் ஆயிரம் ரகம் உண்டு,
அழகில் தேவதை முகம் உண்டு..

நினைப்பதை முடிக்கும் மனம் உண்டு,
திறமை அவள் கை வசம் உண்டு..

அடிக்கும் கைக்கொண்டே அரவணைப்பாள்,
பாசத்தின் வலைக்கொண்டே சிறைபிடிப்பாள்..

கோவமும் பகையும் நிறைந்திருக்கும்,
அதற்குள் பாசமும் மறைந்திருக்கும்..

நேற்று மழலை பாடிய மான் குட்டி,
இன்று காலம் கனிந்திட மலர்ந்துவிட்டாள்..

இரு கரத்தில் தவழ்ந்த பனி கட்டி,
என் தோளுக்கும் மேலே வளர்ந்துவிட்டாள்..

எழுதியவர் : சீனு (24-Jan-17, 11:48 pm)
சேர்த்தது : சீனு
பார்வை : 4451

மேலே