யார் வென்றது
இவர்கள் !
மாணவர்கள் மாணவிகள்
அறவழிப் போராட்டத்தினால்
மகான் ஆனவர்கள்
நாளைய நாயக நாயகிகள் ..
சாதிமத பேதம் மறந்தோம்
மற்றுமொரு முறை
விடுதலை கிடைக்க
நீதி பிறக்க
கடற்கரையில் அமர்ந்தோம்
ஏறுதழுவுதலில் இணைந்தோம்
எதிர்காலம் எம்கையில்
என்பதுணர்ந்தோம் !
சில கருங்காலிகளால்
பெருங்கோரங்களால்
பெரும் காயம் வந்திருக்கலாம்
கலகமேயில்லாமல்
நீங்கள் செய்த
இந்த வேள்வியில்
உலகமே உங்களை
வியந்து பார்த்தது
வியப்புக்கே வியப்பு வந்தது !
கலக்கம் வேண்டாம்
காலம் வரும்
நமக்கும் காலம் வரும்
நம் எண்ணங்கள்
புனிதம் பெரும்
சிறந்த பேரோடுதான்
தொடர்ந்து போராடுவோம் !
மாநில அரசு !
அது மைய அரசின்
கை கூலி !
இவர்கள் -பணம்
தின்னும் கழுகுகள்
படுபாதகத்தின் உறவுகள் !
நேர்மையை எதிர்பார்க்காதே ...
மனைவியை விற்பவர்களிடம்
மனசாட்சி எப்படி இருக்கும் !
மைய அரசு !
மை அரசு - பன்னாட்டு
நிறுவனங்களின் இந்நாட்டு முரசு !
ஐயோ !பல பொய்யான
மனிதர்களுக்கு
மெய்யான மக்கள்
தங்கள் பொன்னான கையால்
மையால் வாக்களித்ததால்
தரிசான இந்தியா ...