எதைத் தான் நம்புவது,
போலி அழகைக் கண்டு ஏமாறும் உங்களுடைய கண்களை நம்பாதீர்கள்...
பொய்களை உண்மையென்றுரைக்கும் உங்களுடைய காதுகளை நம்பாதீர்கள்...
ஆரோக்கியமற்ற உணவை சுவையென உண்ணும்,
தரமற்ற வார்த்தைகளைப் பேசும் உங்களுடைய வாய் மற்றும் நாக்கை நம்பாதீர்கள்...
நறுமணம் நுகர்ந்து அறிவிழக்கச் செய்யும் உங்களுடைய மூக்கை நம்பாதீர்கள்....
ஒருவனுக்கு ஒருத்தியென்ற பண்பாட்டை மீறி ஆடம்பர சுகம் தேடும் உங்களுடைய உடலை நம்பாதீர்கள்...
ஆனால்,
நல்லதை அறிவுறுத்தும் பகுத்தறிவுடன் இணைந்த உங்களுடைய மனதைக் உறுதியோடு நம்புங்கள்...