போராட்டக் களம்

பெருமை கொள்கிறேன்...

எம் இளைஞர்கள் இப் பேருலகையே அதிரவைத்ததைக் கண்டு...

அதிர்ச்சி அடைகிறேன்...

நம் காவல்துறையினரை வைத்தே நம்மில் கலவரத்தை தூண்டியதைக் கண்டு...

வெட்கித் தலைகுனிகிறேன்...

வேடமிட்ட சில நரிகள் வேலியாக நம்மை நமக்கே அறியாமல் நம்மை பயன்படுத்தியதைக் கண்டு...

கர்வம் கொள்கிறேன்...

பச்சிளம் குழந்தைகள்கூட பசிமறந்து போராடுவதைக் கண்டு...

ஆதங்கம் கொள்கிறேன்...

அந்திசாயும் வேளைவரை மந்தைக்குள் நுழைய வாய்ப்பு கிட்டாதமைக்கு...

தற்காலிகமாய் விடைபெருகிறேன்...

நாளைய விடியலில் நமக்கான விடுதலை நோக்கி...

( எத்தனையோ இளைய சமுதாயம் எட்டுதிசையிலிருந்து இணையதள குறுஞ்செய்திகள் வழியாக நிறைய செய்திகள் பகிர்ந்திருந்தாலும் அனைத்தினையும் என்னால் படித்து பதிலளிக்க முடியவில்லை...

அதற்காக நான் அனுப்பிய அனைவரிடமும் மன்னிப்பு கோருகிறேன்... )

" வாழ்க தமிழ் "

நன்றி...

எழுதியவர் : கௌதமன் நீல்ராஜ் (25-Jan-17, 8:07 am)
சேர்த்தது : கௌதமன் நீல்ராஜ்
பார்வை : 86

மேலே