தடை உடை
தடை அதை உடை
என் தமிழினமே......
யாரவன் பீட்டா
நமக்கென்ன கேட்டா?
சேர்ந்திடு தமிழினமே
கரம் கோர்த்திடு.......
பாரம்பரியம்
காத்திட என்னினமே
பெரும்படையென திரண்டிடு.......
நம் தோழனின் திமிலை தழுவிட
வேறெவனுக்குண்டடா தீரம்
அறிந்திடு
அடக்கு முறையினை உடைத்தெறிந்திடு.......
கலாச்சாரம் காத்திடு
கடலலையாய் எதிர்த்தடித்திடு......
நாம் தமிழரென்பதை
யுகம் காண உணர்த்திடு......
கிள்ளு கீரையல்ல
கிளர்ச்சி பாறையென காட்டிடு........