கைவிளக்காய் வந்தாள்

கனிச்சோலை,பூக்காடு
கழனி,தென்றல் அவளை
கவினுடனும் நெஞ்சத்தால்
காதல் கொள்வான்!
குறையாத வளமிக்காள்!
குறைகளற்றாள்,குறைமதியோர்
தமக்குமொரு கதியார் வந்தாள்!
மாமதுரை மன்றத்தே
வளர்ந்த பெண்ணாள் அவள்
பிறப்பதுயார் அறிவார்?
அது புவிக்கும் முன்னாள்!
நிறைமதியோர் கைப்பாவை
நீதிமாறாள்.கதியற்றோர்
தமக்கு கைவிளக்காய் வந்தாள் அன்னை கைவிளக்காய் வந்தாள்

எழுதியவர் : மாதவன் (26-Jan-17, 6:23 pm)
சேர்த்தது : peremivenkatesan
பார்வை : 93

மேலே