வீர விதை

கடலோரத்தில்
வீரமணம் வீசிக்கொண்டிருக்கிறது
வீதியெங்கும் பேச்சு

சுவாசிக்கப் புறப்பட்டாள்
சுவாசத்தில் எனக்கதை ஊட்ட

சாதிக்க வேண்டும்
அவளின் கர்பம்
சரித்திரத்தில் நிலைக்கவேண்டும்

ஆம்...
அவள் எண்ணியது வேறு
ஆனாலும்
நிலைத்துவிட்டேன்

முலாம் பூசிய காவலின்
முரட்டுத்தனத்திற்கு
காயப்பட்டுப்போய்
சதைப்பிண்டமாய்க்
கடலோரம் கரைந்துகொண்டு ...

#மணிமீ
#jallikattu

எழுதியவர் : மீ.மணிகண்டன் (27-Jan-17, 10:36 am)
Tanglish : veera vaithai
பார்வை : 3119

மேலே