ஊசிமுனைமுறிப் பாட்டு
ஊசிமுனைமுறிப் பாட்டு
மின்னொத்த மெல்லிடையாள் வேல்போன்ற கண்ணுடையாள்
என்னைக் கவர்ந்தாள் இயம்பினகேள்;- என்னத்தான்
எத்தனை முத்தங்கள் 0 0 0 என்றளித்தீர்
அத்தனையும் முத்தென்றாள் ஆ(ம்)!
ஆம்
இது என்ன 3 ஆம்அடியில் 3ஆம் சீர் 0 0 0 , என்று பார்க்கிறீர்களா? ஆம் அதுதான் முத்தம் பதிக்கும் போது எழுமே அந்த ஒலிக்குறிப்பை (இச் இச் இச்) இதனை பனைஒலையில் எழுத முடியாதல்லவா!?. அந்த இடத்தில் 0 0 0 என்று எழுதுவதை வழக்காக்கினர். அதனை பழங்காலத்தில் ஊசிமுனைமுறிப் பாட்டென்று காட்டினர்.
அது சரி இதற்கு ஆதாரம் உண்டா என்றால், உண்டு மதிப்பிற்குரிய ஐயா வாகீச கலாநிதி கி.வா.ஜ அவர்கள் எழுதிய ‘ விடையவன் விடைகள்” என்ற புத்தகத்தில் இதுபற்றி எழுதியுள்ளார். அவர்மேற்கோள் காட்டியது சித்தர் இடைக்காடர் தம் பாடல்.இன்று அதனைபடித்ததால் இதனை வடித்தேன். பாவலர்கள் கருத்துரைக்காகப் பதிகின்றேன். கருத்துக்களாயினும் சரி மாற்றுக்கருத்துக்கள் இருப்பினும் பதிக
அன்புடன் எதிர்பார்க்கிறேன்