அவள்

எத்தனையோமுறை உனக்கே தெரியாமல் உன்னை ரசித்ததுண்டு,
உன் கண்ணை ரசித்திருக்கிறேன் , உன் உதட்டை ரசித்திருக்கிறேன்,
உன் குதிரைவால் கூந்தலை எண்ணில்லடங்காமுறை ரசித்ததுண்டு,
நீ உன் இடது கை அசைத்து பேசுகையில் , அந்த சுண்டுவிரல் என்மீதுபட்டு விடாதா என்று எத்தனையோ நாள் ஏங்கியதுண்டு,
உன் "சுடிதார் ஷால்" வாசனையை கூட ரசித்திருக்கிறேன்,
நீ ஒரு விதமாக முகம் சுழிப்பாயே அதையும் ஏங்கி ஏங்கி ரசித்ததுண்டு,
நீ திட்டும் தோரனைக்காகவே, பல தவறுகள் செய்ததுண்டு,
இறுதியாக
"வாழ்க்கை இறுதிவரை என்னை காப்பாற்றுவாயா" என்று கேட்டாய்
அதற்கு நானோ கூறினேன்
'
'
"நீ தான் என்னையே காப்பாற்ற வேண்டும்
உன் பார்வையிளிருந்து" என்று,,,,
இப்படிக்கு,
என்றும் என்றென்றும் நான்,,,,,,