”சட்டம்”

வருடங்கள் பல கடந்து போனதால் -
சட்டத்திற்கும் வயதாகிறதோ ?

ஆளும் கட்சியின் ஆட்டத்திற்கேற்ப -
வளைந்து கொடுக்கிறதே !

புதிய சட்டம் வருவதெப்போ ?
வளைந்த சட்டம் நிமிர்வதெப்போ ?

பணம் எனும் மாயையில் -
தீர்ப்புகளும் தடுமாறுகிறது !
உண்மையும் -
ஊமையாகிறது !

ஏட்டுச் சுரைக்காய் -
கறிக்கு உதவாது !
எழுதிவைத்த சட்டமும் -
எட்டா கனியானது !

மக்கள் எழுச்சி -
மலையளவு வளர்ந்தாலும் ;
மாற்றம் மட்டும் வருவதில்லை !
கண்களை கட்டியிருப்பது -
கருப்பு துணி என்பதாலா ?

புரிந்து கொண்டேன் !
வாய்மையே வெல்லும் -
வசதி இருந்தால் மட்டுமே !

எழுதியவர் : H ஹாஜா மொஹினுதீன் (29-Jan-17, 10:55 am)
சேர்த்தது : H ஹாஜா மொஹினுதீன்
பார்வை : 391

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே