அழியப் போகிறாய் உனது செயலாலேயே
நடிகனுக்கு கோஷமிட கூடும் கூட்டமே, மனிதனுக்காகக் கூடிவிட மாட்டாயோ???...
பணத்திற்காக மனிதப்பண்புகளை அடமானம் வைத்து வாழும் கூட்டமே,
மனிதப் பண்புகளை எப்போது மீட்கப் போகிறாயோ???...
கம்பத்திலொரு கொடியைக் கட்டி, கட்சியென்று பெயரிட்டு கொள்கைக்காக நாங்களென்று கூறி கொள்ளையிட்டுப் பிழைக்கும் அரசியல் கூட்டமே,
உனது அழிவு நெருங்குவதை அறிய மாட்டாயோ???...
குழப்பத்தை ஏற்படுத்தி,
குளிர்காயலாமென்றெண்ணி, நீ மூட்டு ஒவ்வொரு அக்னிக் குழியிலும் வீழ்ந்து மடியப் போவது நீயே...
உன்னை யாரும் இரட்சிக்க போவதில்லையே...
மரணமொன்றே உன்னை இரட்சிக்குமே...
உன்னால் முடிந்தால் நீ சேர்த்த சொத்து, செல்வம், கட்டிய மனைவி, பெற்ற பிள்ளைகள், உருவாக்கிய கட்சியென யாவற்றையும் உன்னோடு மரணம் தாண்டியே அழைத்துச் செல்வாயாக...
அவ்வாறு நிகழ்வதும் சாத்தியமன்றே...
ஏனெனில், உயிரோடு ஒட்டி, உன்னை உலகிற்கு அடையாளம் காட்டிய உனது உடலைக்கூட உன்னோடு எடுத்துச் செல்ல முடியாது....