தொங்கிடும் வாழ்க்கை - மரபு கவிதை
தொங்குகின்ற வாழ்க்கையிது
------- தொடர்ந்திடுமா எந்நாளும் .
அங்கிங்கே தொங்குகின்றார்
------- ஆக்கத்தை நோக்கியுமே
எங்கெங்கு சென்றாலும்
------- எத்திக்கும் தடைகளுமே !
மங்கிடாது முயற்சிசெய்தால்
------- மகத்துவமே வாழ்வினிலே !!
காலடியில் தொடங்குகின்ற
----- காலம்தான் உயரங்கள் .
சீலங்கள் பெற்றுநமை
------ சிறப்புடனே வாழவைக்கும் .
பாலங்கள் அமைத்திடுவோம்
------ பாதையிலும் சென்றிடுவோம் .
ஞாலங்கள் நமைநோக்கும்
------ ஞாயிற்றாய் ஒளிதருமே.
நாளும்நாம் முயற்சிதனை
------ நன்றெனவே செய்திடுவோம்
சூளுரைத்தே இவ்வுலகில்
------ சுகமாக வாழ்ந்திடுவோம் .
மூளுகின்ற பிணக்குகளும்
------- முயற்சினால் தீர்ந்திடுமே .
மாளுகின்ற சோர்வெல்லாம்
------ மாறிவிடும் மண்ணுலகில் .
உயரங்கள் என்பதெல்லாம்
------ உள்ளத்தின் வெளிபாடாம் .
தயக்கங்கள் இன்றியுமே
------- தாரணியில் கால்வைப்போம் .
மயக்கங்கள் வேண்டாமே
------- மாறிவிடும் தொடக்கங்கள் .
பயக்கின்ற நல்வாழ்வு
------- பல்கியுமே பெருகிவிடும் .
சாதனைகள் படைத்திடலாம்
-------- சாதிப்போம் நாமிங்கே .
சோதனையும் தீர்ந்துவிடும் .
------ சோகமது மாறிவிடும் .
வேதனையும் இனியில்லை .
------ வேண்டுவனக் கிட்டிடுமே .
சீதனமும் இதுவன்றோ
------- சீர்பெறட்டும் தொடக்கங்கள் .!!!
மொத்த வரிகள் :- 24
ஆக்கம் :- பைந்தமிழ்ப் பாமணி . சரஸ்வதி பாஸ்கரன்