காதல் தீபம்
ஏற்றிவைத்த காதல் தீபமல்லவோ நீ
என் மனதில் நின்று எரியும் அணையா தீபம்
உன்னைக் காணவில்லை என்று
என் மனம் பித்தாய் அலைகிறது
நீ எங்கு சென்றாய் என்னவளே
என் காதல் கனிரசமே குலவிளக்கே
இன்னும் நாம் வாழ்ந்திட காலம் இருக்கு
இதை உணர்ந்து விரைவாய் வந்திடுவாய்
உனக்காகவே வாழும் என்னை நம்பிடுவாய்
என் முன்னே நின்றிடுவாய் கோல கிளியே
ஏற்றிவைத்த காதல் தீபம் அல்லவா நீ
என் மனதில் என்றும் அணையா காதல் தீபம்
இன்னும் நாம் வாழ காலமிருக்கு
அதனால் இந்த காதல் தீபத்தை
இப்போதே அமர தீபம் ஆக்கிவிடாதே