பிழைத்துவிட்டு போகிறேன்

உன்
அலட்சிய பார்வைக்கே
ஒழுகுகின்றன என்
ஆன்மத் துளிகள்
உன்னில் திமிரா ?
திமிரில் நீயா ?
எதில் யார் அழகு ?
விவாதங்கள் நடத்தி
யாரேனும் விடை கூறுங்கள்
அதுவரையில் ...
நான் உன்னை
ரசித்துக்கொண்டிருக்கிறேன் !
ஒவ்வொரு முறை நீ
முறைத்து பார்க்கும் போதும்
உன்னிடம் முத்தங்கள்
பெற்ற கிறக்கம் எனக்கு !
வேகமான உன்
நடைகளில்,
லேசாய்
மூச்சிரைக்கிறது எனக்கு !
உன் முக
பாவணைகளில்
பயித்தியம் பிடிக்கிறது
எனக்கு !
மௌனமான உன்
கோபங்கள் என்
செவிகளில்
இசையாய் நீள்கின்றன... . !
நீ வார்த்தை
கணைகள் வீசுவாய்
என்றால் என்றும்
உன் எதிரில்
நிற்பேன்
நிராயுதபாணியாய் !
என்னை புறக்கணித்து
போகும் போது
ஐயோ .. பாவம் என
என் இதய திருவோட்டில்
ஒரு புன்னகை பிச்சை
இட்டு போ
பிழைத்துவிட்டு போகிறேன் !