மறைப்பது சரியோ
ஆசை கனியே அரசகுமாரி
அழகு கவியே அதிசயநங்கை
சொல்வது சரிதானா - நான்
சொல்வது சரிதானா இல்லை
இதிலும் பிழை உண்டோ!
கனவின் உள்ளே வருபவன் நானே
இதுவும் பொய்யன்றோ !
உண்மை இல்லையன்றோ !
காதல் இல்லையன்றோ !
பாவை உலகின் அற்புத ராசன்
அரச நாயகியின் காதல் தலைவன்
அவனே நானன்றோ !
உண்மை இதுவன்றோ!
வார்த்தை கொட்டி தீர்த்தாலும்
உன்னவன் நான் தானே!
வார்த்தை இன்றி தவித்தாலும்
உன்னவன் நான் தானே !
அழகிய அமுதே பாவை கொடியே
இன்பக் கனியே அன்பு நிலவே
இதை மறைப்பது சரியன்றோ!
என்னை வதைப்பது சரியன்றோ!