சின்னப்புள்ளத்தனமா

என்னங்கடா இது
சின்னப்புள்ளத்தனமா இருக்கு?
ஆளாளுக்கு முதலமைச்சர்-றீங்க,
அதுக்கு என்னென்னமோ பதில் வேற
ஏண்டா இப்படி ஆனீங்க.
ஒரு பய கூட மாத்திசொல்லாம
என்னடா இது எங்களுக்கேதும்
புரியலையே.

ஒரு நாள் முதலமைச்சர்-ன்னு
எல்லாரும்தான் ஆசைப்படலாம்
அதெப்படி இப்படி ஒரு விளையாட்டா,
உங்களுக்கெல்லாம்..
என்னமோ நடத்துங்கடா,
வருவீங்க இல்ல பாத்துக்கலாம்.

மக்கள் தீர்ப்பை மகேசன் தீர்ப்புன்னு சொல்லுவாங்க
உங்களுக்குத்தே மகேசன் மேலயும் பயமில்லை,
மக்கள்கிட்டயும் பயமில்லை
கேனப்பய ஊர்ல கிறுக்குப்பய நாட்டாமையடா.

ஊர் சிரிக்குதுன்னு உங்களுக்கு அக்கறையில்லை
ஊர் மட்டுமில்ல காலம் எங்க கூட சேந்து நின்னு
கைகொட்டி சிரிக்கிற நேரம் நெருங்குதுடோய்,
வாங்கடா வாங்க அப்ப வெச்சு செய்வோம்-டா.!

எழுதியவர் : செல்வமணி (6-Feb-17, 7:34 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 539

மேலே