அனாதப்பிணம்

*அனாதப்பிணம்*
***********************

ஒரு ஊர்ல
பஸ் ஸ்டாண்ட் ஓரமா...
ஒருத்தன் ரொம்ப நாளா சுத்தித்திரிந்தான்..

இன்று அவன் இறந்து கிடக்கிறான்...

பொதுவா
அம்மா, அப்பா எல்லோரும்
வெளியூர்ல இருக்கும் தன் பையனுக்கு
போன் பண்ணுனா...
மறக்காம சொல்லும் ஒரு வார்த்தை...

"சாப்டியாப்பா...
நேரத்துக்கு சாப்புடு..."

பொதுவா யாராவது
தெரிஞ்சவங்க வீட்டுப்பக்கம் வந்தாக் கூட...
ஒருவாய் சாப்ட்டு போங்கன்னு சொல்லுவோம்...

அதே மாதிரி தான்
மேலே சொன்ன பஸ் ஸ்டாண்ட் பையனும்...

யாரப்பார்த்தாலும்...
மாமா வீட்டுக்கு வந்து சாப்ட்டு போறது..?
பெரியப்பா வீட்டுப்பக்கம் வரவேயில்ல...?
தங்கச்சி டீ சாப்புடுறியாம்மா...?

நீங்க யாரும் சாப்படல...
நாளைக்கு நா உங்க வீட்டுக்கு வரமாட்டேன்னு
கோபம் வேறப்படுவான்..!!!

இவனுக்குன்னு யாரும் இல்லைனாலும்
ஊரில் உள்ள எல்லோரும்
இவனுக்கு சொந்தக்காருங்க தான்... !

ஆனா
அவங்களுக்கு இவன் பைத்தியக்காரன்...!!

இன்று அவன் இறந்து கிடக்கிறான்...

எல்லோரையும் சொந்தமா நினைச்சான்...
அவன யாரும் சொந்தமா நினைக்கல...

கவெர்மெண்ட் ஹாஸ்பிடல்ல சொல்றாங்க...
"அந்த அனாதப்பிணத்தோட ரிப்போர்ட் வந்துருச்சான்னு..."

எல்லோரையும்
சாப்படவாங்க சாப்படவாங்கன்னு
கூப்ட இவனுக்கு
ஒருத்தரும் ஒருவாய் சோறு போடல...

ஆமா....
தெருவுல சுத்துற பைத்தியத்துக்கு
எப்படி சோறு போடுவாங்க...!

ஒருவேளை போட்டுருந்தா...
அவன் இன்னைக்கு அனாதப்பிணம் இல்ல...!!

இவண்
✒க.முரளி (spark MRL K)

எழுதியவர் : க.முரளி (6-Feb-17, 8:11 pm)
பார்வை : 271

மேலே