காண்பதும், காணாததும்

கண்ணுக்கு புலனாவது எல்லாம்
வெகு சிலவே -புலனாகா பொருட்கள்
கோடான கோடி -இவற்றை காண முயற்சித்தால்
நமக்கு ஆயுள் பத்தாது
அப்படியிருக்க , நம்மைப் படைத்தவனை
நேரில் காண்பது எப்படி, எப்போது யாரறிவார்
சித்தர் கூறுவார் ,உன்னுள்ளே உறைபவனை
தியானத்தால் மனக்கண்முன் நிறுத்து என்று
இப்படித்தான் ஞானியரும், யோகியரும்
இறைவன் தாள் கண்டனரோ அவனுடன்
உரையாடினாரோ வேடத்தை கண்டு
கேட்டு , நமக்கென்று எழுதியும் தந்தனரோ ?

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (11-Feb-17, 2:06 pm)
பார்வை : 104

மேலே