இதழ்களுக்கு இரண்டாம் பட்சம்

இதழ்களுக்கு இரண்டாம் பட்சம்
==============================

ஏதும் பேசவிடாமல்
இடையினைக் கைப்பற்றினாய்
கட்டுப்பாடுகள் ஏதுமின்றி
உன் பெருவிரல்களுக்குள் என் பிடிகளுதரிவிட்டேன்
அங்ஙனம்
சுற்றியெங்கும் வலை எறிகிறாய்
என் விழிகளை
முழுவதுமாய் மூடவோ திறக்கவோ
விடாமல்
அயர்வில் ஆழ்த்துவது இது எத்தனாம் முறை
சுவாசிக்க முடியவில்லை
இந்த இறுக்கம் தளர்த்திக் கொள்ளவாவது
கொஞ்சம்
விட்டுப்பிடிக்கலாம் தானே
எல்லாம் ஆனபின்னால்
வார்த்தைகளைத் தவிர
உன் வருடல்களை எதிர்நோக்கி என் குளிர் ம்ம்
என் காது மடல்களில்
உன் வெப்ப இதழ்கள் பூத்திருக்கின்றன
அந்த இதழ்களின் சிறு இதழ்களுக்குள் மது ஊற்றுகிறாய்
உலரும் போது
விரியும் மலர் உதடுகளைத் தவிர
அப்படிச் செய்து
இறுதிவரை எல்லாம் நனையவைக்கிறாய்
என் ஐந்தாம் நிலையின்
நல்ல மேய்ப்பன் நீ
மீசையால்,
முன் சுருள் கேசத்தால்
அங்குலம் அங்குலம் உறுதி உடைக்கிறாய்
காடு பத்திய
முரளி ஓசைப்போல
இமைக்கரையின் இரு ஓரங்களிலும்
உணர்ச்சி
பெருக்கெடுக்கிறது
நல்ல வேளை
இன்றுவரையும் உன் எச்சில் சுரப்பிகள்
என் உதடுகளுக்கு
இரண்டாம் பட்சம் தான்

"பூக்காரன் கவிதைகள்"

எழுதியவர் : அனுசரன் (11-Feb-17, 2:30 pm)
பார்வை : 144

மேலே