நினைவும் நிஜமும்

கோபம் - பிடித்தவர்களின் மீது உள்ள உரிமையாளும், அக்கறையாளும் அதிகம் வருவது...

பாசம் - அன்பை வெளிக்காட்டாமல் உடலாளும், உள்ளத்தாலும் இணைந்திருப்பது...

சந்தோசம் - தனதாசைகளை அடக்கிவைத்து, இஷ்டமானவர்களின் விருப்பங்களை நிறைவேற்றி வைப்பது...

இன்பம் - உனக்காக நான் இருப்பதை  உண்மையால் கொள்ளை கொள்வது...

நட்பு - விட்டுக்கொடுப்பது தோல்வியில்லை, உன்னிடம் தோற்றாலும் துன்பமில்லை என்று உணர்ந்து கொள்வது...

காதல் - உண்மையான நேசம் புரியும்வரை, புரியாத புதிர் போன்றது...

காமம் -  உடலோடு உடல் சேர்ந்து உள்ளத்தையும் மகிழ்விப்பது...

வாழ்க்கை - இணைந்தவளை இதயத்தில் ஏற்று, வாழ்க்கை முழுவதையும் அர்ப்பணிப்பது...

எழுதியவர் : சே.முகம்மது யாசீன் (14-Feb-17, 4:24 am)
சேர்த்தது : முகம்மது யாசீன்
Tanglish : ninayvum nijamum
பார்வை : 123

மேலே